பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்கள் நிறுத்தம் முன்பதிவு சீட்டுக்கு முழுதொகை பெறலாம்: பயணிகள், தொழிலாளர் பாதிப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

திண்டுக்கல்: கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துப் பயணிகள் ரயில்களும் மார்ச் 21 முதல் 31 வரை நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கு மட்டும் சரக்குரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல் தெரியாத திண்டுக்கல், பயணிகள் மற்றும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் ரயில்நிலையத்திற்கு வந்தனர். அவர்களை நுழைவுப்பகுதியிலேயே போலீசார், ரயில் அலுவலர்கள் விளக்கமளித்து திருப்பி அனுப்பிவைத்தனர். முன்பதிவு செய்து பயணச்சீட்டு வைத்துள்ளவர்களுக்கு ஏப்.1 முதல் ஜூன் 21 வரை முன்பதிவு அலுவலகத்தில் கொடுத்து முழுக்கட்டணத் தொகையும் திரும்ப பெறலாம் என, ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

பயணிகள் வருகையின்றி எப்போதுமே கூட்டமாக காணப்படும் ரயில்நிலைய பிளாட்பாரம் வெறிச்சோடியுள்ளது. இதனால் வருமானம் இழந்து ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X