பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் கேரள மாணவர் உட்பட கண்காணிப்பில் 77 பேர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து வந்த வத்தலக்குண்டு பெண் ஒருவர் குணமாகி வீட்டுக்கு சென்று விட்டார்.கன்னிவாடி கோனுாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மட்டும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷில் இருந்து வந்த 11பேர், ஏற்கனவே வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என மொத்தம் 77 பேரை சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். கேரள கல்லுாரி மாணவருக்கு கொரோனா அறிகுறி இல்லை. அவரை விரைவில் வீட்டிற்று அனுப்பி வைக்க உள்ளோம்.மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை, என டாக்டர்கள் கூறினர். -------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X