பொது செய்தி

தமிழ்நாடு

நூற்பாலை தொழிலாளர் இடையே கொரோனா அச்சம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

வேடசந்துார் : வேடசந்துார் தாலுகா பகுதி நுாற்பாலை தொழிலாளர்களிடையே கொரோனா பாதிப்பு அச்சம் அதிகரித்துள்ளது

வேடசந்துார் தாலுகா பகுதியை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு வறட்சி பகுதியாக அறிவித்தது. அப்போது இங்குள்ளவர்களின் வாழ்வாதாரம் கருதி ஏராளமான நுாற்பாலைகள் அரசு மானியத்துடன் தனியாரால் துவங்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது இந்திய அளவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்திலும் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் வேடசந்துார் தாலுகா பகுதியில் பணியாற்றும் நுாற்பாலை தொழிலாளரிடையே கூடுதல் அச்சம் ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் செயல்படும் 60 க்கும் மேற்பட்ட நுாற்பாலைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றுவதே இதற்கு காரணம்.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், ஆம்னி வேன் மற்றும் மினி வேன்கள் மூலம் வீடுகளில் இருந்து அழைத்து வரப்படுகின்றனர். மீண்டும் பணி முடிந்து, வாகனங்களிலேயே அவர்கள் தங்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்கள் வடமாநில தொழிலாளர்களுடன் பணிபுரியும் இடங்களில் ஒன்றாகவே உள்ளனர். வடமாநில தொழிலாளரும் சொந்த ஊர் செல்வது, திரும்புவதுமாக உள்ளனர்.

மேலும் இங்குள்ள தொழிலாளர்களின் உறவினர் பலர் கேரளா உட்பட பிற மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். இதனால் தொழிலாளர்களிடையே கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X