பொது செய்தி

தமிழ்நாடு

விளைபொருள் சேமிப்பு ரசீது மூலம் வங்கி கடன் பெறலாம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

வடமதுரை : விளைபொருள் சேமிப்பு ரசீது பயன்படுத்தி வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெறலாம் என தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: விவசாயிகள் விளைபொருள்களைச் சேமிக்கவும், இழப்பு சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கும் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கு ரசீது வழங்கப்படுகிறது. இந்த ரசீதை பயன்படுத்தி தங்களின் பொருள்களுக்கு ஈடாக வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.இந்நிறுவனம் அறிவியல் முறையில் தானியங்களை எவ்வாறு பாதுகாப்பாகச் சேமிப்பது என்பது குறித்தும் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கிறது.

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் ஆதரவு விலை மற்றும் விலை கட்டுப்பாடு திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் உதவி செய்கிறது. தமிழகத்தில் 60 இடங்களில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் செயல்படுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X