பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து அதிகரிப்பு! இருநாட்கள் விடுமுறைக்குப் பின் திறந்ததால்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம் : இரண்டு நாள் விடுமுறைக்கு பின்பு, திறந்த ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகமாக இருந்ததால் வாகனங்கள் நீண்ட துாரம் நின்றிருந்தன.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் சனியன்று மார்க்கெட்டிற்கு விடுமுறையாகும். இந்நிலையில் பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் (மார்ச் 22) மார்க்கெட் விடுமுறை விடப்பட்டது.

இதன்காரணமாக சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்து விட்டது. இந்த இரண்டு நாட்களும் மார்க்கெட் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வரவில்லை. இந்நிலையில் நேற்று மார்க்கெட் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.

இரண்டு நாட்களாக பறிக்காமல் விடப்பட்ட காய்கறிகளை விவசாயிகள் மொத்தமாக பறித்துக் கொண்டு சரக்கு வாகனங்களில் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தனர். வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டதால் மார்க்கெட்டிற்குள் நெரிசல் ஏற்பட்டது. தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட பல காய்களின் விலை ஏற்றமடைந்தும், வெண்டை உள்பட சிலவற்றின் விலை குறைந்தும் விற்பனையானது.

அதன்படி ரூ.6.45க்கு விற்ற தக்காளி - 7.15 க்கும், ரூ.3 ஆக இருந்த பீட்ரூட்- 5 ஆகவும் அதிகரித்தது. அதேசமயம் ரூ.21க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.18க்கு விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X