பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை நபருக்கு 'சமூக பரவலால்' கொரோனா?

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
coronavirus,covid19,Madurai,corona,கொரோனா,மதுரை

மதுரை: மதுரையை சேர்ந்த நபருக்கு, 'கொரோனா' பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், அவர் வெளிநாட்டிலிருந்து வராதவர் என்பதால், 'சமூக பரவலில்' தொற்று பரவியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து, வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், 9 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது நபருக்கு, 'கொரோனா' பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் வெளிநாட்டிலிருந்து வராதவர் என்பதால், 'சமூக பரவல்' முறையில், வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

latest tamil news
இந்நிலையில் நேற்று (மார்ச் 23) மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, 12 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், இருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். மற்றொருவர் மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர்.

அவர் வெளிநாட்டிலிருந்து வராதவர்; வெளியூர் எங்கும் செல்லாதவர். இவருக்கு 'சமூக பரவலால்' கொரோனா பரவியிருக்குமா என்ற பீதி ஏற்பட்டுள்ளது. 54 வயது நிரம்பிய அந்த நபருக்கு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தகவல் சேகரிப்பு

மதுரை கலெக்டர் வினய் கூறுகையில், மதுரையில், 144 தடை உத்தரவு அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

மதுரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை நடந்துள்ளது. அவரது வீட்டில் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் 60 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் விவரத்தை சேகரித்துள்ளோம். அவர் தொடர்பு கொண்ட நபர்களின் விவரம், தொழுகைக்கு சென்ற இடத்தில் தொடர்பு கொண்டவர்களின் விவரம் சேகரிக்கப்படுகிறது.

கொரோனா அறிகுறியுடன் 7 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மார்-202004:37:59 IST Report Abuse
J.V. Iyer நம்மவர்களுக்கு பேசும்போதே எச்சில் தெறிக்கும். அது இரண்டு மூன்று அடிகளுக்கு தெறிக்கும். நாம் முககவசம் அணியவில்லை என்றால், நம்மக்கு தொற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. நாமும் மற்றவர்களுக்கு பரப்ப வாய்ப்புண்டு. எனவே தூர தொல்லை நிற்பது நல்லது. தெருவில் அனாவஸ்யமாக நடக்கவேண்டாம். முதியவர்கள், உங்களைத்தான் அதிகம் தாக்கும். நம்மவர்களுக்கு எப்போதான் புரியுமோ? எல்லாம் முடிந்தபிறகு லபோதிபோ என்று அடித்துக்கொள்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
NRajasekar - chennai ,இந்தியா
25-மார்-202004:32:12 IST Report Abuse
NRajasekar இவனுக செய்தியில். தொழுகை என்று மறந்து போட்டு விட்டு விட்டானுகளே. இவனுக எந்தெந்த நாட்டில் இருந்து வரவனுகளை மசூதி யில் ஒளித்து வைத்துக்கொண்டு ஆதரித்து கொண்டு இருக்கானுகளே அரசாங்கம் ஏன் இன்னும் இவர்கள் விஷயத்தில் மெத்தனமாக இருக்கிறது. இது மற்ற மக்களின் பாதுகாப்புக்கு அச்சம் இல்லையா. இவ்வளவு தாழ்ந்து போய் வோட்டு போய்விடும் என்ற பயமா. நிச்சயம் ஆளும் கட்சி க்கு இவர்கள் போடபோவதில்லை. அப்பாவிமக்களை காப்பாற்ற கடும் நடவடிக்கை தேவை
Rate this:
Share this comment
Cancel
R Kumaran - Madurai,இந்தியா
24-மார்-202018:13:29 IST Report Abuse
R Kumaran the news is not exactly true.few tourists from Thailand visited the mosque where the victim is In Charge.he brought them to his home for lunch.Thus he acquired Corona from the tourists
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X