பொது செய்தி

இந்தியா

கொரோனாவை வென்ற ஒரு லட்சம் பேர்

Updated : மார் 24, 2020 | Added : மார் 24, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
CoronaVirus, Recovered, RecoverToll, COVID_19, கொரோனா, வைரஸ், குணமடைந்தவர்கள், கோவிட்19, எண்ணிக்கை, அதிகரிப்பு,

புதுடில்லி: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

சீனாவில் தொடங்கிய உயிர்கொல்லி தொற்றான 'கொரோனா வைரஸ்' உலகம் முழுவதும் ஆட்டிப்படைகிறது. 195 நாடுகளில் பரவிய வைரசால், இதுவரை 3,78,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 16,512 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் குறித்து பயம் மக்களிடையே பரவினாலும், கட்டுப்பாடுகளாலும், தனிமைப்படுத்தலாலும் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்து வருகின்றனர்.


latest tamil news



வைரஸ் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 64 பேர் முழுவதும் குணமடைந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே இறந்துள்ளனர். 27 சதவீதம் பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து முழுவதும் குணமாகி 'டிஸ்சார்ஜ்' ஆகியுள்ளனர். இது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news



கொரோனா தாக்கத்திற்கு சிகிச்சை அளிக்க, அமெரிக்கா மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் 'ஹைட்ராக்சிகுளோரோக்வின்' என்ற மருந்தை பயன்படுத்தும்படி, பரிந்துரை செய்துள்ளது. மேலும், பல நாடுகளிலும் இதற்கான மருந்தை தயாரிக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். இதனால், விரைவில் கொரோனா முற்றிலும் தடுக்கப்படும் எனவும், பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இது மக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasan - doha,கத்தார்
25-மார்-202000:59:20 IST Report Abuse
vasan மனிதன் அறிவியல் முன்னேற்றத்தால் எல்லவற்றையும் அடைந்து விட்ட மமதை தான் காரணம் இயற்கை பேரியக்க ஆற்றல் முன்னாள் நாம் ஒன்றுமே இல்லை....எப்போது மனிதன் சுய நலம் இல்லாமல் இறை நம்பிக்கை இல்லாமல் பாவகாரியங்களில் ஈடுபடுகிறானோ அப்போது ஆண்டவன் எச்சரிக்கை மணி அடிக்கிறான்....ஒரு மனிதனால் (ஜின் பிங்க்) எத்தனை அப்பாவி உயிர்கள் போகின்றன ...இப்போதும் நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் நமக்கு சங்கு தான்.....சீனா அளித்த பரிசு தான் இது இனிமேல் அந்த நாட்டை உலக நாடுகள் தனிமை படுத்தி தண்டிக்க வில்லை என்றால் அடுத்து இதை விட மோசமான வைரஸ் கிருமியை பரப்புவான் அதற்க்கு மருந்து கண்டுபுடிச்சி மற்ற நாடுகளை மிரட்டுவான்.......எதுலேயும் குறுக்கு புத்தி மத்தவனை அழித்தாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம்....
Rate this:
Cancel
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
24-மார்-202013:21:56 IST Report Abuse
M.P.MADASAMY கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை கூடுவதற்கும் மாண்டவர்கள் எண்ணிக்கை குறைவதற்கும் ஆண்டவன் துணையுடன் போராடுவோம்.
Rate this:
Cancel
24-மார்-202012:33:02 IST Report Abuse
நக்கல் சீனா சொல்லுவதை நம்பமுடியவில்லை... பன்னாடை பாண்டியன் போன்று யாராவது சீனாவில் இருப்பவர்கள் அங்கிருக்கும் உண்மையான நிலையை விளக்கலாம்...
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
24-மார்-202018:11:54 IST Report Abuse
sankarபன்னாடை அங்க உள்ள நிலமையை சொன்னா சீனா அவருக்கு மறு பிறவி அளித்து விடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X