பொது செய்தி

தமிழ்நாடு

வேலூரில் மேற்குவங்க வாலிபர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி

Added : மார் 24, 2020
Share
Advertisement

வேலூர்: அதிக காய்ச்சல், இருமல், சளியால் அவதிப்பட்ட, மேற்குவங்க வாலிபர் வேலூர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர், சி.எம்.சி., மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இவர்கள், வேலூர் மெயின் பஜார், காந்தி ரோடு, ஆற்காடு ரோடு, சத்துவாச்சாரி பகுதி லாட்ஜ்களில் தங்கி உள்ளனர். இதில், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள், ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்துள்ளனர். லாட்ஜூகளில் தங்கியுள்ள, வெளி மாநிலத்தவர்கள் குறித்து, வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி, எந்தவிதமான சிகிச்சைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பது போன்ற, விபரங்களை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 22ல், மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவரும், வாணியம்பாடி ஜெயில் கைதி ஒருவரும், அதிக காய்ச்சலுடன், அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மேலும் ஒரு வாலிபருக்கு காய்ச்சல், இருமல், சளி, அதிகமாக இருந்ததால், கெரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்தம், சளி போன்றவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X