பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

தி.மலை: திருவண்ணாமலைக்கு, சுற்றுலா விசா மூலம் வந்த சுற்றுலா பயணிகள், அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலைக்கு ஆண்டுதோறும், ஆக., முதல், பிப்., வரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள், ஆஸ்ரமம், விடுதி மற்றும் தனியாக வீடுகளை வாடகைக்கு எடுத்த தங்கி செல்வர். தற்போது, கோடை வெப்பம் சுட்டெரிக்க தொடங்கியதால், கடந்த பிப்., மாதமே அவர்கள் சொந்த நாட்டிக்கு செல்ல தொடங்கினர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால், போலீசார், அங்குள்ள வெளிநாட்டினரை கண்டறிந்து, அவரவர் நாடுகளுக்கு திரும்ப கேட்டு கொண்டனர். அதன்படி, கடந்த, 18 வரை, சுற்றுலாவில் வந்த, வெளிநாட்டினர் அனைவரும் வெளியேறி விட்டனர். தற்போது, 100க்கும் குறைவானவர்களே இங்குள்ளனர். அவர்கள், இங்கேயே தங்க அனுமதி பெற்றவர்கள். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்ததில், 38 பேரை மாவட்ட நிர்வாகம் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஆனால், காய்ச்சல் அறிகுறி இருந்தது. விமான நிலைய ஆய்வில், கெரோனா பாதிப்பு இல்லை என, சான்று பெற்றிருந்தனர். அவர்களிடம் பெற்ற விபரங்கள் அடிப்படையில், அவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X