பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சாக்கடை வசதி செய்து தரப்பட வேண்டும்: சங்ககிரி, மோரூர் மேற்கு ஊராட்சி, ரயில்வே ஸ்டேஷன் அருகே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, சாக்கடை வசதி இல்லாததால், கழிவு நீர் தேங்கி, சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து, ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

- எஸ்.ரவிசுப்பிரமணியன், சங்ககிரி.

வீதியில் ஓடும் கழிவுநீரால் அவதி: மேட்டூர், தூக்கனாம்பட்டி நகராட்சி பள்ளி பின்புறம், சாலையோரம் மழைநீர் வடிகால் கட்டவில்லை. இதனால், பள்ளியின் மறுபக்கம் அமைந்துள்ள வீடுகளிலுள்ள கழிவுநீர், சாலையில் ஓடி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. அந்த வழியாக குடியிருப்புகளுக்கு செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பாதிப்பை தடுக்க, சாலையின் ஒரு பகுதியில் மழைநீர் வடிகால் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ். ராமகிருஷ்ணன், மேட்டூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X