பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் எதிரொலி: இ-சேவை, ஆதார் மையம் மூடல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

மேட்டூர்: கொரோனா தாக்கத்தை தொடர்ந்து, நேற்று முதல் தாலுகா அளவில் இயங்கிய, இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் மூடப்பட்டன. தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில், தமிழகத்தில் தாலுகா அளவில் இ-சேவை மையங்கள், ஆதார் சேர்க்கை மையங்கள் இயங்குகின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று தாலுகா அளவில் இயங்கிய இ-சேவை மையங்கள், ஆதார் சேர்க்கை மையங்களை வரும், 31 வரை மூட அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று மேட்டூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கிய இரு மையங்களும் மூடப்பட்டதால் சான்றிதழ்கள், ஆதார் சேர்க்கைக்காக சுற்றுப்பகுதியில் இருந்து மேட்டூர் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X