பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பகுதியில், வட்டார மருத்துவ அலுவலர் சதீஸ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறையினர் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், தினமும் ஆரம்ப சுகாதார நிலையம் வரும் புறநோயாளிகளுக்கு ஹேண்ட் சானிடைசர், ஸ்பிரிட் கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்படுகின்றனர். புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டுகளில் லைசால், சோடியம் ஹைப்போ குளோரைடு கலந்து ஸ்பிரேயர் மூலம் கிருமி நாசினி அடித்து வருகின்றனர். நேற்று, பஸ் ஸ்டாண்ட், பேரூராட்சி அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், பாரத ஸ்டேட் வங்கி, ஏ.டி.எம்., மையம் ஆகிய இடங்களில் கிருமி நாசினி அடித்தனர். இலங்கை தமிழர் முகாம் மற்றும் தம்மம்பட்டி பெருமாள், ஆஞ்ச நேயர், சிவன், மாரியம்மன் கோவில்கள் மற்றும் கடைவீதி மசூதி, பஸ் ஸ்டாண்ட் மசூதி மற்றும் கோனேரிப்பட்டி புனித சலேத் அன்னை பேராலயம் போன்ற இடங்களிலும் கிருமி நாசினி அடித்தனர்.* ஆத்தூர், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள பஸ்களில், கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டன. புது பஸ் ஸ்டாண்டிற்குள் வந்த அனைத்து அரசு, தனியார் பஸ்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஸ் சக்கரங்கள், பயணிகள் படியேறும் வழிகள் உள்ளிட்ட பகுதிகளில், 'சோடியம் ?ஹப்போ குளோரைடு' கலந்த கிருமி நாசினிகள் ஸ்பிரேயர் மூலமாக தெளிக்கப்பட்டது.


* பேளூர் பேரூராட்சிக்குட்பட்ட, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலையம், மாரியம்மன் கோவில் வளாகம், ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவு மேற்பார்வையாளர் முருகன் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலக வளாகத்தில், பணியாளர்கள் கை கழுவி செல்லும் விதமாக, கை கழுவும் மருந்து வைக்கப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பழமை வாய்ந்த பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வெளியே பிரதான ராஜகோபுரம் முன் நின்று தேங்காய், பழம் தட்டு வைத்து வழிபட்டு சென்றனர்.


* மேட்டூர் நகராட்சி சார்பில், பஸ் ஸ்டாண்ட், வெளியூரில் இருந்து வரும் பஸ்கள், மேற்கு பிரதான சாலை, கடைவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் டேங்கர் லாரியில் நிரப்பிய, 5,000 லிட்டர் கிருமிநாசினி, ஜெட் இயந்திரம் மூலம் தெளிக்கப்பட்டது. பணிகளை, நகராட்சி ஆணையாளர் (பொ) மார்ட்டின் நிக்சன், சுகாதார அலுவலர் ஜெயராமன் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X