தமிழ்நாடு

மருத்துவமனை கேன்டீன்களில் அதிக கூட்டம்: நோய் தொற்று பரவலை தடுக்க முடியுமா?

Added : மார் 24, 2020
Share
Advertisement

சேலம்: சேலம், அரசு மருத்துவமனை கேன்டீன்களில், மக்கள் அதிகளவில் கூடுவதால், நோய் தொற்று பரவலை எப்படி தடுக்க முடியும் என, ஊழியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சேலம், அரசு மருத்துவமனையில் ஆறு இடங்களில் கேன்டீன்கள் உள்ளன. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், சில மாதங்களுக்கு முன்பு, சோதனை நடத்தி அதிக நிறமிகள் கலந்த தரமற்ற உணவு பொருட்களை, அங்கிருந்து பறிமுதல் செய்து அழித்தனர். கேன்டீனில், உணவு பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அடுப்பு வைத்து, உணவுபொருட்களை தயாரித்து விற்கக்கூடாது என, கடுமையாக எச்சரித்துவிட்டு சென்றனர். இந்த உத்தரவை, காற்றில் பறக்கவிட்டு கேன்டீன்கள், விதிமீறி செயல்படுகின்றன. தற்போது கொரோனாவை தடுக்க, மக்கள் அதிகம் கூடுவதை அறவே தவிர்த்து, தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். அதற்கான, நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மருத்துவமனை கேன்டீனில், மக்கள் அதிகளவில் கூடுவதோடு, மணி கணக்கில் அமர்ந்து, 'ஹாயாக' பேசிவிட்டு, செல்வதை கண்கூடாக பார்க்கலாம். இதை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை என, ஊழியர்கள் புகார் கூறுகின்றனர். எனவே, நோய் தொற்று இடமாக, சேலம் அரசு மருத்துவமனை மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊழியர்கள் புலம்பல்: கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப, டாக்டர்கள், செவிலியர்களுக்கு மட்டுமே மருத்துவமனை நிர்வாகம் முக கவசம் வழங்குகிறது. ஆண், பெண் செவிலிய உதவியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அடிப்படை ஊழியர்களுக்கு, முக கவசம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X