பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

குடிநீர் தொட்டி சரி செய்யப்படுமா? சங்ககிரி - திருச்செங்கோடு சாலையில், கோழிக்கால் நத்தம் பிரிவில், மக்கள் பயன்பாட்டிற்காக மினி தொட்டி அமைத்து, காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால், தொட்டியை முறையாக பராமரிக்காததால், சில மாதங்களுக்கு முன், தொட்டியின் அடிப்பாகம் உடைந்து குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. அதனால், அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
மண் அகற்றும் பணி; சேதமடைந்த சாலை: பனமரத்துப்பட்டியில், சேலம் சாலையின் இருபுறத்திலும் மண் நிரம்பியுள்ளது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரத்தில் உள்ள மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. அப்போது, ஓட்டுனரின் கவனக்குறைவால், தார்ச்சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. நல்ல நிலையில் இருந்த தார்ச்சாலை சேதப்படுத்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர்.

எரியாத விளக்குகள்; இருளில் தவிப்பு: ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டி நான்கு சாலை சந்திப்பில், உயர் கோபுர தெருவிளக்குகள் உள்ளன. ஓராண்டுக்கு முன், உயர்கோபுர விளக்கு கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து அதை தொடுபவர்களை தாக்கியது. இதை தொடர்ந்து விளக்குகளும் பழுதாகி விட்டன. இன்று வரை சரி செய்யாததால், இப்பகுதி மக்கள் மட்டுமன்றி, இவ்வழியாக சென்னகிரி, இருசனம்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள் இருளில் தவிக்கின்றனர்.

பூட்டியே கிடக்கும் பெண்கள் கழிவறை: காகாபாளையம், அருந்ததியர் தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதி மக்கள் பயன்பெற, கட்டப்பட்ட கழிவறை பராமரிக்காததால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்தாண்டு இரண்டு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி, கழிவறையை பராமரித்து தண்ணீர் வசதி செய்து, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. தண்ணீர் உள்ளிட்ட அனைத்து வசதிகள் இருந்தும், நுழைவு வாயிலை பூட்டி வைத்துள்ளனர். இதனால் பெண்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

பயன்படாமல் உள்ள சமுதாயக்கூடம்: கொங்கணாபுரம் ஒன்றியம், கச்சுப்பள்ளி பகுதியில் உள்ள சமுதாயக்கூடம், 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு, திருமண விழா, காது குத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் சமுதாய கூடத்தின் முன்புறம் செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. இதனால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊராட்சிக்கு வருவாய் கிடைக்க, சமுதாய கூடத்தை பராமரிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X