பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன்கடை, மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதுவதால் கட்டுப்பாடு அவசியம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

வீரபாண்டி: 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து, மாநிலம் விட்டு மாநிலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 'மக்கள் ஊரடங்கு' அறிவிக்கப்பட்டது. அதை மக்கள் 100 சதவீதம் கடைபிடித்தனர். இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று காலையில் இருந்து மக்கள் மீண்டும் கூட்டமாக இருக்க துவங்கி விட்டனர். எஸ்.பாப்பாரபட்டி-சென்னகிரி சாலையில் இருபுறங்களிலும் திறந்து கிடக்கும் சாக்கடைக்கு அருகே, வரிசையாக காய்கறி கடைகள் காணப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் கூடி, காய்கறிகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். வாரச்சந்தைகள் ரத்து செய்யப்பட்டதை போல், தினசரி சந்தைகளும் சுகாதாரமான இடத்தில் வைத்து, குறிப்பிட்ட இடைவெளியில் மக்கள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் ரேஷன் கடைகளில், அரிசி வாங்க நீண்ட வரிசையில் ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டு மக்கள் நின்றிருந்தனர். உலகையே அச்சுறுத்தி வரும் 'கொரோனா'வை தடுக்க, அதிகாரிகள் மட்டுமன்றி பொதுமக்களும் சுய கட்டுப்பாட்டுடன் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X