பொது செய்தி

தமிழ்நாடு

விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

இடைப்பாடி: கொரோனா வைரஸ் காரணமாக, ஈரோடு மாவட்டத்திற்குள் எவரையும் அனுமதிக்காததால், பூலாம்பட்டியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமான தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவையடுத்து, நேற்று காலை முதல் இந்த மூன்று மாவட்டத்திற்குள் நுழையும் மக்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகளை போலீஸ் விதித்துள்ளது. சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் இருந்து, ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கு, காவிரி ஆற்றின் குறுக்கே விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணித்து, சேலம் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கும், அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இருந்து, சேலம் மாவட்டத்துக்கும் சென்று வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக, நேற்று காலை முதல், இரு மாவட்ட எல்லைக்குள் சென்று வர போலீசார் தடை விதித்தனர். இதனால், தினமும் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து நேற்று நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X