பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை ஊழியர்கள் முக கவசம் அணிய உத்தரவு

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ரேஷன் கடை ஊழியர்கள், முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என, கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் பணி, போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. ரேஷன் கடையில், மக்கள் கூடுவர் என்பதால், ஊழியர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடை இயங்கும் நேரத்தில், அடிக்கடி கைகளை சோப்பு மூலமாக நன்கு கழுவிக்கொள்ள வேண்டுமென, வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக நுகர்வோர் பணிகள், கூட்டுறவு சங்க பதிவாளர் அந்தோணிசாமி ஜான்பீட்டர், நேற்று அனைத்து மண்டல இணை பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விபரம்: அனைத்து ரேஷன் கடைகளும், உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். அத்தியாவசிய பொருள் போதுமான இருப்பு வைத்திருக்க வேண்டும். ஏப்ரல் மாதத்துக்கான பொருட்களை, 60 சதவீதம் முன் கூட்டியே வழங்கப்பட வேண்டும். ரேஷன் கடை பணியாளர்கள், முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பணி நேரத்தில் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கு தேவையான கிருமி நாசினி, கடைக்கு வருபவர் களிடம் கிருமி நாசினி போதுமான அளவு கடைகளில் இருப்பதை தெரிவிக்க வேண்டும். சுழற்சி முறையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி, கூட்டம் தவிர்க்க வேண்டும். கடைக்கு வருபவர்களிடம் நெருங்கி நிற்பதை தவிர்க்கும் வகையில், தனிமைப்படுத்துதல் நடைமுறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ரேஷன் கடை பணியாளர்கள் கூறுகையில், 'ரேஷன் கடையில் பணிபுரியும் அனைவருக்கும் முககவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இங்குள்ள கூட்டுறவு அலுவலர்கள், போதுமான முக கவசம் வினியோகம் செய்யவில்லை' என்றனர்.

சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் மொத்தம், 1,570 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் விற்பனையாளர், கட்டுனர்களுக்கு, முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் கை கழுவும் சோப்பு, முக கவசம் ஆகியன வழங்கும்படி, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு போதுமான முககவசம் வழங்குவதுடன், அவ்வப்போது ஆய்வு பணிகளும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X