பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் வெளியூர் செல்ல அலைமோதிய மக்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஆத்தூர்: 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, தமிழக அரசு சார்பில், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், வெளியூர் செல்ல ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி, வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல், ஏராளமானோர் வெளியிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் கூலிவேலை செய்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது. இதனால், இவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை உள்ளது. இதனிடையே, இன்று மாலை, 6:00 மணி முதல், 144 தடை உத்தரவு பிறப்பித்து நேற்று, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து, தங்களது சொந்த ஊருக்கு வருகின்றனர். தவிர, ஆத்தூரில் இருந்து சேலம், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்களில் அதிகளவில் ஏறிச் சென்றனர். இந்த பஸ்கள், முழுமையான அளவில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின், வழித்தடங்களில் அனுமதிக்கப்பட்டது. ஆத்தூர் புது பஸ் ஸ்டாண்டில், பயணிகள் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது.


* பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சேலத்தில் வசிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், நேற்று மதியம் முதல் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில், கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால், பஸ்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X