பொது செய்தி

தமிழ்நாடு

வருகை தரும் வெளிநாட்டவர் பற்றி தகவல் கொடுங்க: சேலம் கலெக்டர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோர் குறித்து, உடனடியாக தகவல் தெரிவிக்க கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம், கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்துக்கு, ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த, 247 பேருக்கு முறையான பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின், 14 நாட்கள் தனிமைப்படுத்தி, தற்போது நலமாக உள்ளனர். இதுவரை, கொரோனா தாக்கம் மாவட்டத்தில் இல்லை. எனவே, கொரோனா தொற்றில் இருந்து நம் அனைவரையும் பாதுகாத்திட, உறுதி ஏற்க வேண்டும். கடந்த ஜன.,28க்கு பின், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் யாரேனும் இருப்பின், அவர்களாகவே முன்வந்து தங்களுடைய விபரங்களை, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மற்றும் 0427-2450022, 2450023, 2450498 என்கிற தொலைபேசியில் தெரிவிக்க வேண்டும். அதே போல, வெளிநாடு சென்று திரும்பியவர்கள் பற்றிய தகவலையும், பொதுமக்கள் தெரிவிக்கலாம். தகவல் சொல்லாதது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை உண்டு.

சேலம், அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட, 21 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டு, 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவக்குழுவுடன், தயார் நிலையில் உள்ளது. மேலும், தொற்று உள்ளவர்கள் கண்டறிந்து, தனிமைப்படுத்த இரும்பாலையில் உள்ள சுகாதார மனிதவள மேம்பாடு நிறுவனம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, அரியானூர் அடுத்த சீரகாபாடி விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அன்னபூரணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. எஸ்.கே.எஸ்., மணிபால், கோகுலம், தரண், காவேரி, விம்ஸ் ஆகிய ஆறு மருத்துவமனைகளிலும், அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதர தனியார் மருத்துவமனைகளிலும், 25 சதவீத வார்டுகள் உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X