சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் நிறுத்துவதில் மோதல்: வாலிபருக்கு கத்திக்குத்து

Added : மார் 24, 2020
Share
Advertisement

சேலம்: சேலம், சிவதாபுரம் கருப்பனூரை சேர்ந்தவர் பாலன், 20. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வீட்டின் அருகே தனது பைக்கை நிறுத்த வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த பூபதி, 27, என்பவர் சற்று தள்ளி நிறுத்துமாறு கூறி உள்ளார். பூபதியின் நண்பர்கள் சிலர், பாலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்குதலிலும் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த பூபதி தரப்பினர் கத்தியால், பாலனை குத்தி விட்டு தப்பி ஓடினர். பாலனை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தானும் காயமடைந்ததாக கூறி, அரசு மருத்துவமனையில் பூபதி சிகிச்சை பெறுகிறார். கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலனை கத்தியால் குத்தியவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X