சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பார் ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Added : மார் 24, 2020
Share
Advertisement

சங்ககிரி: பார் ஊழியர் கொலை வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சங்ககிரி, தேவூர் அருகே தண்ணீர் தாசனூரில், டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி இயங்கிய பாரில், ஆலச்சம்பாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி, 30, பணிபுரிந்தார். கடந்த, 11ல், கோனேரிப்பட்டி அக்ரஹாரம், பூமணியூரை சேர்ந்த துரைராஜ், 34, உள்ளிட்ட சிலர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், அக்கும்பல், ராமமூர்த்தியை வெட்டியதில் அவர் உயிரிழந்தார். தேவூர் போலீசார் விசாரித்து, இடைப்பாடி அருகே கல்லம்பாளையம் வாசுதேவன், பூமணியூர் துரைராஜ், கரட்டுக்காடு முருகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு தேவூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, இடைப்பாடி அருகே, பூமணியூரை சேர்ந்த கட்டட தொழிலாளி கவுதம், 25, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X