சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., மீது தாக்குதல்: 8 பேர் கைது

Added : மார் 24, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு போனில் பேசிய ஒருவர், சோளம்பள்ளம் காந்தி நகரில் சாக்கடையை சாலையில் சிலர் திறந்து விட்டுள்ளதாகவும், அதில், கொரோனா தொற்று கிருமியை கலப்படம் செய்து உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். சூரமங்கலம் எஸ்.ஐ., பாரதிராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு போதையில் பைக்கில் வந்தவரை போலீசார் பிடித்தனர். அவர், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகியான ஜெயக்குமார், 45, என தெரியவந்தது. அவர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, போலீசார் தன்னை தாக்கியதாக கூறி, சாக்கடையில் குதித்தார். இதில் அவருக்கு பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. ஆத்திரமடைந்த அவர், வாயில் வடிந்த ரத்தத்தை எஸ்.ஐ., பாரதிராஜா மீது துப்பி உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஜெயக்குமாரின், 16 வயது மகன் எஸ்.ஐ., கழுத்தை கெட்டியாக பிடித்துள்ளார். இதை பார்த்த போலீசார், சிறுவனிடம் இருந்து எஸ்.ஐ., காப்பாற்றி உள்ளனர். அப்போது அங்கிருந்த, 10க்கும் மேற்பட்டோர் எஸ்.ஐ., போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டதோடு, சாலைமறியல் நடத்தினர். சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர் செல்வராஜ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால், மறியல் கை விடப்பட்டது. அதன் பின்னர் போலீசார் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக சோளம்பள்ளம் காந்திநகரை சேர்ந்த ஜெயராஜ், 41, சித்தேஸ்வரன், 28, விஜயகுமார், 36, ஜெகதீஷ், 28, பரமசிவம், 35, முருகேசன், 34, நந்தகுமார், 21, மனோஜ்குமார், 34, ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தப்பி ஓடிய ஜெயக்குமார், அவரது, 16 வயது மகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X