பொது செய்தி

தமிழ்நாடு

துப்புரவு பணியாளர்களுக்கு உபகரணம் வழங்க கோரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஈரோடு: துப்புரவு பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க கோரி, மகாத்மா துப்புரவு மற்றும் மலமள்ளுவோர் மறுவாழ்வு நலச்சங்க, மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கமுத்து தலைமையில், ஈரேடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு அளித்தனர்.
மனு விபரம்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சி மேற்கொள்கிறது. அதேநேரம், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தகுந்த உபகரணங்களின்றி, கழிவு, மருத்துவ கழிவு, சாக்கடைகளை அகற்றி சுத்தம் செய்கின்றனர். தினமும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, தூய்மை பணி செய்வோருக்கு முதற்கட்டமாக சுகாதார உபகரணங்கள், சோப்பு உள்ளிட்டவை வழங்க வேண்டும். பலர் உபகரணமின்றி, கைகளால் அனைத்து வகை குப்பைகளையும் அகற்றி, வாகனங்களில் குவிக்கின்றனர். மீண்டும், அவற்றை கைகளால் அகற்றும் நிலை தொடர்கிறது. அவர்களுக்கும் கொரோனா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க, தேவையான உபகரணங்கள், நவீன கருவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X