பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று பாதுகாப்பு பகுதி வீடுகளில் ஸ்டிக்கர்: மக்கள் கையிலும் 'சீல்' வைப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில், தாய்லாந்துகாரர்கள் தங்கி சென்று, பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அங்கும் வசிக்கும் மக்களின் கைகளில் 'சீல்' வைக்கப்பட்டது.
ஈரோடு, கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதிக்கு கடந்த, 16ல் வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த, ஐவரில், இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகரில் அவர்கள் தங்கிய, சென்ற பகுதிகளுக்கு சீல் வைத்து, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலெக்டர் கதிரவன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆகியோர், அவ்வீடுகளை அடையாளம் காணும் வகையில், நேற்று மாலை ஸ்டிக்கர் ஒட்டினர். அந்த ஸ்டிக்கரில், அவ்வீட்டின் குடும்ப தலைவர் பெயர், மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை குறித்தனர். தவிர, அவ்வீட்டில் உள்ள ஒவ்வொருவரது வலது கையிலும், அழியாத 'சீல்' வைத்தனர்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: இப்பகுதியில் உள்ள, 160 வீடுகளை சேர்ந்த, 695 நபர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, வசிக்கும் மக்களின் இடது கையில் சீல் வைக்கப்படும். இவர்களுக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்த, 28 நாட்கள் ஆகும். அதுவரை தனிமைப்படுத்தப்படுவர். நாளை (இன்று) மாலை முதல் மாநில அளவில், 144 தடை உத்தரவு அமலாகிறது. அத்தியாவசிய இயக்கமான ஆம்புலன்ஸ், காய்கறி, ரேஷன் கடை, பால் போன்றவை வினியோகிக்கப்படும். மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்படும். ஆம்புலன்ஸ், அரசு வாகனங்கள் இயக்கப்படும். முக்கிய அரசு அலுவலகங்கள் தவிர மற்றவை செயல்படாது. தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும். ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இன்றி, பொருட்கள் கிடைக்கும். அச்சப்பட வேண்டாம். ஏ.டி.எம்.,களில், 30 நிமிடத்துக்கு ஒரு முறை, பணியாளர்கள் மூலம் சேனிட்டரேஷன் செய்யப்படும். ஏ.டி.எம்., வருவோருக்கும், கைகளை சுத்தம் செய்ய மருந்து வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X