பொது செய்தி

தமிழ்நாடு

'ஆயிரக்கணக்கானோர் வருவதால் எங்களை கொரோனா தாக்காதா?' மதுக்கடையை மூடக்கோரி மனு

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர், பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சுரேஷ், கோவை மண்டல தலைவர் நந்தகோபால் ஆகியோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பெட்டியில் மனுவை போட்டு கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, 22ல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. ஆனால் கடைகள் செயல்படுகின்றன. மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி உள்ளதால், டாஸ்மாக் கடைக்கும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு தொற்று இருந்தால், அவர்கள் தொடும் பாட்டில், நாணயங்கள் மூலம் எங்களுக்கும் வரும். மாவட்ட அளவில் உள்ள, 203 டாஸ்மாக் கடைகளையும் வரும், 31 வரை விடுமுறை வழங்கி, மூட வேண்டும். பணியாளர்களின் நலன் கருதி, இந்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X