சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டப்பகலில் ஆட்டுக்குட்டி திருட முயன்ற 2 பேர் கைது

Added : மார் 24, 2020
Share
Advertisement

பவானி: சித்தோடு அருகே, ஆட்டுக்குட்டி திருட முயன்ற இருவர் சிக்கினர். சித்தோடு அருகேயுள்ள, ஆர்.என்.புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 55; சலவை தொழிலாளி. இரண்டு வெள்ளாட்டு குட்டிகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை, 9:00 மணியளவில், வீட்டின் முன்பு குட்டிகளை கட்டியிருந்தார். வெளியே சென்று விட்டு மீண்டும் வந்தார். அப்போது ஒரு ஆட்டுக்குட்டியை திருடிக் கொண்டு இருவர் தப்ப முயன்றனர். இதைப்பார்த்து சுப்பிரமணியம் சத்தமிடவே, ஆட்டுக்குட்டியை விட்டுவிட்டு இருவரும் தப்பி ஓட முயன்றனர். அக்கம்பக்கத்தினர் விரட்டி பிடித்து, சித்தோடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த அழகுபாண்டி, 22; பெரியசேமூரை சேர்ந்த பாலகிருஷ்ணன், 24, என்பது தெரிந்தது. மாவட்டமே கொரோனா அச்சத்தால் மூழ்கியிருக்க, ஆட்டுக்குட்டி திருட வந்த இருவரால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X