சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் டிரைவர் விபரீத முடிவு: தி.மு.க., நிர்வாகி மீது புகார்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஈரோடு: கார் டிரைவர் தற்கொலை தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி மீது, கவுந்தப்பாடி போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
கவுந்தப்பாடி, கண்ணாடி புதூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 38; இவர் மனைவி அனு, 28; காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனர். ராமச்சந்திரன் ஆக்டிங் டிரைவர். கவுந்தப்பாடி, அய்யன்காட்டை சேர்ந்தவர் கார்த்தி. இவரிடம், நண்பருக்கு சொந்தமான காரை, அடமானம் வைத்து, 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். பணம் திரும்ப பெறுவது தொடர்பாக, அனுவிடம் அடிக்கடி மொபைல்போனில், அசிங்கமாக, இரட்டை அர்த்த வசனங்களில் கார்த்தி பேசினாராம். சில நாட்களுக்கு முன், கணவனை பிரிந்து வந்தால், உன்னை வைத்து காப்பாற்றுகிறேன் என, அனுவிடம் கார்த்தி பேசினாராம். இதனால் அனு, ராமச்சந்திரனிடையே வாய் தகராறு ஏற்பட்டது. மன உளைச்சலுக்கு ஆளான ராமச்சந்திரன், 16ம் தேதி விஷம் குடித்தார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 21ம் தேதி இரவு இறந்தார். இந்நிலையில், தனது கணவர் சாவுக்கு கார்த்தியே காரணம் என்று கூறி, கவுந்தப்பாடி போலீசில், அனு புகார் கொடுத்துள்ளார். கவுந்தப்பாடியை சேர்ந்த கார்த்தி, 37, தி.மு.க., மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி இணை அமைப்பாளராக உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X