பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : மார் 24, 2020
Share
Advertisement

சேதமான குடிநீர் குழாயால் தொற்று: தர்மபுரி, அன்னசாகரம் செல்லும் பிரதான குடிநீர் குழாய், இங்குள்ள இந்தியன் வங்கி முன் கடந்த, 15 நாட்களுக்கு முன் சேதமடைந்தது. இதனால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதுடன், சேதமாக குடிநீர் குழாயிலிருந்து குடிநீர் சாக்கடையில் கலந்து வருகிறது. இதனால், குடிநீரில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும், அதிகாரிகள் சேதமான குழாயை சீரமைக்கவில்லை.
பயனின்றி உள்ள சுகாதார வளாகம்: கோணங்கிநாயக்கனஹள்ளி பஞ்., பகுதியில், 2016ல், மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. திறப்பு விழா நடந்ததோடு சரி, இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அப்பகுதியினர் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளுக்கு செல்கின்றனர். வளாகம் பயன்பாட்டுக்கு வராததால், அப்பகுதி பெண்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இவர்கள் நலன் கருதி, சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திறந்த நிலையில் மின்சார பெட்டி: தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில், கோல்டன் தெரு சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில், திறந்த நிலையில் மின்பெட்டி உள்ளது. இவ்வழியாக சென்று வரும் சிறுவர்கள் மட்டுமின்றி, வாகன ஓட்டிகளும் மின்விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மக்களின் நலன் கருதி, மின்வாரிய நிர்வாகம், திறந்தநிலையில் தாழ்வாக உள்ள மின்பெட்டிக்கு கதவு அமைக்கவும்,போதிய உயரத்தில் மின்பெட்டியை விரைந்து மாற்றி அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X