பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா உடற்பயிற்சி கூடத்தை திறக்காததால் மக்கள் ஏமாற்றம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

அரூர்: தீர்த்தமலையில், பூட்டியுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. தீர்த்தமலை அடிவாரத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள், படித்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த, 2016 - 17ல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், திறக்கப்படாமல் பூட்டியுள்ளது. இதனால், விடுமுறை நாட்கள் மற்றும் காலை, மாலை நேரங்களில் தங்களது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வரும் பெற்றோர் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பூட்டிக்கிடப்பதால், ஏமாற்றம் அடைகின்றனர். மேலும், உடற்பயிற்சி கூடத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பயன்படுத்தப்படாமல், வீணாகி வருகிறது. எனவே, பூட்டிக் கிடக்கும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X