பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து: கலெக்டர் அலுவலகம் 'வெறிச்'

Added : மார் 24, 2020
Share
Advertisement

தர்மபுரி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் அங்குள்ள பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு உத்தரவின்படி, தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம் போன்றவை ரத்து செய்யப்பட்டன. மனு அளிக்க விரும்புகிறவர்கள், மனுக்களை பெட்டியில் போடலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, திங்கட்கிழமையான நேற்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மனுக்கள் அளிக்க வந்தவர்களை, மெயின்வாசலில் முழுமையாக விசாரித்த பின்னரே, கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். இதேபோல், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அனைவருக்கும், கிருமி நாசினி தெளித்து, கைகள் கழுவிய பின்னரே, அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X