பொது செய்தி

தமிழ்நாடு

அரூரில் கொரோனா தடுப்பு: கலெக்டர், எஸ்.பி., ஆய்வு

Added : மார் 24, 2020
Share
Advertisement

அரூர்: அரூரில், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து, கலெக்டர் மற்றும் எஸ்.பி., நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த, 19 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில், பி.இ., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 17ல், வீட்டிற்கு வந்த அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற மாணவியை, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இதே போல், அரூரை சேர்ந்த மற்றொரு, 17 வயது பெண் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். இவர்கள் இருவருக்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பரிசோதனை மேற்கொண்டதில், அவர்களுக்கு சாதாரண சளி, இருமல் என தெரிய வந்தது. இதையடுத்து, இருவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, நேற்று மாலை, 4:30 மணிக்கு, அரூர் வந்த கலெக்டர் மலர்விழி, எஸ்.பி., ராஜன், சப் - கலெக்டர் பிரதாப், வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன் உள்ளிட்ட அதிகாரிகள், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பெண்கள், 28 நாட்களுக்கு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள், சுகாதார துறையினரின் தொடர் கண்காணிப்பில் இருப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X