சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற பணிக்கு போலி பணி நியமன ஆணை: இருவர் கைது

Added : மார் 24, 2020
Share
Advertisement

தர்மபுரி: நீதிமன்ற பணிக்கு, போலி நியமன ஆணை வழங்கிய இருவரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நாகனம்பட்டியை சேர்ந்தவர் சிவா, 21; கவுரி செட்டிப்பட்டியை சேர்ந்தவர் சஞ்சீவன், 23. இருவரும் நேற்று, தர்மபுரி நீதிமன்றத்துக்கு சென்று, அங்கிருந்த சிரஸ்தார் அண்ணாத்துரையிடம், சிவா, மாவட்ட அமர்வு நீதிமன்ற அலுவலக நிர்வாக உதவியாளர் பணிக்கும், சஞ்சீவன், அரூர் சார் நீதிமன்ற இளநிலை அலுவலக நிர்வாக உதவியாளர் பணிக்கான போலி நியமன ஆணையை காண்பித்துள்ளனர். அண்ணாத்துரை விசாரித்ததில், அது போலி நியமன ஆணை என தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட முதன்மை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிமன்ற, முதன்மை நிர்வாக அலுவலர் பாஸ்கரன் கொடுத்த புகாரின்படி, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், எஸ்.ஐ., பிரகாஷ் ஆகியோர், நீதிமன்ற பணிக்கு போலி நியமன ஆணை வழங்கிய சிவா, சஞ்சீவன் ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X