பொது செய்தி

தமிழ்நாடு

கையுறையின்றி பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில், 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், 33 வார்டுகளில் குப்பை மற்றும் கால்வாயை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இவர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில், கையுறை, ஷூக்கள் மற்றும் விஷேச உடைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இவை நாளடைவில் சேதமடைந்து பாதிக்கும் மேற்பட்டவர்களிடம் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. அவ்வாறு வைத்திருப்பவர்களும், கையுறை மற்றும் ஷூக்களை அணிந்து பணியாற்றுவதில்லை. தற்போது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கைகளால், குப்பை அள்ளுவதால், தொற்று பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து, தூய்மை பணியாளர்களிடம் கேட்டபோது, குப்பை அள்ளுபவர்களுக்கு பிளாஸ்டிக்கால் ஆன கையுறை மற்றும் ஷூக்களை வழங்கி உள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டர்களிடம் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளன. தற்போது வெப்பம் அதிகரித்துள்ளதால், பிளாஸ்டிக் கையுறை அணிந்து பணியாற்ற முடிவதில்லை என்றனர். எனவே, தூய்மை பணியாளர்களுக்கு கோடைக்காலத்தில், துணியால் ஆன கையுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் அனைத்து பஞ்சாயத்திலும், குப்பை அள்ளுவோர் கையுறை இல்லாமல், பணியாற்றி வருகின்றனர் என்பது, குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X