பொது செய்தி

தமிழ்நாடு

மலை மாதேஸ்வரன் கோவில் திருவிழா; பக்தர்கள் செல்ல வேண்டாம்: கலெக்டர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஓசூர்: கர்நாடகா மாநிலம், மலை மாதேஸ்வரன் கோவிலில், யுகாதி திருவிழா கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்ட பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம் என, மாவட்ட கலெக்டர் பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகா மாநிலம், மலை மாதேஸ்வரன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் யுகாதி பண்டிகை திருவிழா கொண்டாட்டம் நடக்கும். இந்த ஆண்டு கடந்த, 21ல் திருவிழா துவங்க இருந்தது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், யுகாதி பண்டிகை திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திலிருந்து பக்தர்கள் யாரும், மலை மாதேஸ்வரன் கோவிலுக்கு யுகாதி திருவிழா கொண்டாட வர வேண்டாம் என, கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்ட நீதிபதி மற்றும் துணை ஆணையர் மூலம் கடந்த, 17 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள, மலை மாதேஸ்வரன் கோவிலுக்கு, யுகாதி திருவிழா கொண்டாட்டங்களுக்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, பக்தர்கள் யாரும் செல்ல வேண்டாம். மேலும், நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X