பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கிற்கு பின் இயல்புநிலைக்கு திரும்பிய ஓசூர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஓசூர்: தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் உள்ள ஓசூரில், நேற்று அதிகாலை ஊரடங்கு முடிந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். கொரோனா பாதிப்பை தடுக்க, இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதிப்பட்டனர்.
கொரோனா பாதிப்பை தடுக்க, தமிழகத்தில் நேற்று காலை, 5:00 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. கர்நாடகா - தமிழக எல்லையில் உள்ள ஓசூரில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பின், வழக்கம் போல் படிப்படியாக டீக்கடை, ஓட்டல், வணிக வளாகங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர், கடைகள் போன்றவை திறக்கப்பட்டன. மக்கள் தங்களது வழக்கமான பணிகளை செய்ய துவங்கியதால், இயல்பு நிலை திரும்பியது. நேற்று முன்தினம் வெறிச்சோடிய எம்.ஜி.,ரோடு, நேதாஜி ரோடு, பழைய பெங்களூரு சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், நேற்று வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்தது. ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி வாங்க, மக்கள் குவிந்தனர். பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கர்நாடகா எல்லையில், பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அடைக்கப்பட்டு, சர்வீஸ் சாலை வழியாக தமிழகத்துக்குள் நுழைந்த அனைத்து வாகனங்களுக்கும், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. மாநில எல்லைகள் மூடப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தாலும், கர்நாடகாவில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும், தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. ஆனால், கர்நாடகா - தமிழகம் இடையே தினமும் சென்று வரும், 400க்கும் மேற்பட்ட இரு மாநில அரசு பஸ்களும் நேற்று இயக்கப்படவில்லை.


சேலம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பெங்களூரு சென்ற அனைத்து அரசு பஸ்களும், ஓசூர் பஸ் ஸ்டாண்டுடன் நிறுத்தப்பட்டன. கர்நாடகாவில் இருந்து, அதிகளவு மக்கள் ஓசூருக்கு இடம் பெயர்ந்ததுடன், ஓசூரிலிருந்து கர்நாடகா செல்லும் மக்களும் அதிகமாக இருந்ததால், ஓசூரிலிருந்து குறிப்பிட்ட நேர இடைவெளியில், சில அரசு டவுன் பஸ்கள் மட்டும், கர்நாடகா மாநில எல்லை வரை இயக்கப்பட்டு, பயணிகள் அழைத்து வரப்பட்டனர். ஓசூரிலிருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்று வந்த, மூன்று தனியார் பஸ்களை, வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி நிறுத்தி பறிமுதல் செய்தார். அதனால், மேற்கொண்டு தனியார் பஸ்கள் பெங்களூரு செல்லவில்லை. ரயில் சேவை இல்லாததால், நேற்றும், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் வெறிச்சோடியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X