சேதமான மேல்நிலை நீர்தேக்க தொட்டியால் விபத்து அபாயம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: சேதமான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், செம்படமுத்தூரில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆழ்துளைக்கிணறு அமைத்து கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன்பு, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இத்தொட்டியின் நான்கு தூண்களிலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதம் அடைந்துள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல், குறைந்தளவே தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனால், நாள்தோறும் மூன்று முறை தண்ணீர் ஏற்றவேண்டி உள்ளது. மேலும், தொட்டியின் மேல் பகுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து தண்ணீரில் விழுகிறது. இவற்றை, ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்ய மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. இத்தொட்டியின் அருகில் ஒகேனக்கல் குடிநீர் பிளாஸ்டிக் தொட்டி வைத்துள்ளனர். இதில், பெண்கள் அச்சத்துடன் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். எனவே, சேதமடைந்த மேல்நிலைத்தொட்டியை அகற்றி விட்டு, புதிய தொட்டியை கட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X