தமிழ்நாடு

பிரச்னைகளில் ஓசூர் சிறு குறு தொழிற்சாலைகள்; புரட்டி போட காத்திருக்கும் 'கொரோனா' வைரஸ்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூரில் உள்ள சிறு, குறுந்தொழிற்சாலைகள், பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் நிலையில், 'கொரோனா' வைரஸ் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது.
தொழில் நகரான ஓசூரில் உள்ள, டி.வி.எஸ்., அசோக் லேலண்ட் போன்ற குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்களின் ஆர்டர்களை நம்பி, 3,000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டுக்கும், மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு உற்பத்தி நடக்கிறது. பல்வேறு காரணத்தால், ஓசூர் சிறு, குறு தொழிற்சாலைகள் நிமிர முடியாமல் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில், 'கொரோனா' வைரஸ் பரவி வருவதால், டி.வி.எஸ்., நிறுவனம் இன்று (மார்ச், 24) வரையும், அசோக் லேலண்ட் நிறுவனம், 28 வரையும், விடுமுறை அறிவித்து விட்டன. நாட்டில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், சிறு, குறுந்தொழிற்சாலைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தொழில்முனைவோர் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.

இது குறித்து, டான்சியா சங்க இணை செயலாளர் ஞானசேகரன் கூறியதாவது: பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்ந்து, 28 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, சிறு, குறுந்தொழிற்சாலைகளை பாதித்தன. உலக பொருளாதார மந்தநிலை, பி.எஸ்., 6 தொழில்நுட்பம் போன்றவற்றால், சிறு, குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு, மூன்று சிப்டிற்கு பதில், ஒரு சிப்ட் பணி மட்டுமே நடக்கிறது. 60 சதவீத பணிகள் பாதித்துள்ளன. கொரோனாவால், சில பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, உலக பொருளாதார மந்தநிலையால் இன்னும் சரியாக ஆர்டர் வராத நிலையில், கொரோனாவால் சிறு, குறு தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கிகளில் (சிட்பி) வாங்கிய தொழில் முதலீட்டுக்கடன், நடைமுறை மூலதன கடன், வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றுக்கு, ஒரு ஆண்டு விடுமுறை காலமும், வட்டியை தள்ளுபடி செய்யவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு, குறுந்தொழிற்சாலைகளுக்கு, 25 சதவீத உடனடி கடன் வழங்க, அனைத்து வங்கிகளும் நடைமுறை படுத்த வேண்டும். கொரோனாவை பேரழிவாக கருதி, சிறு, குறுந்தொழிற்சாலைகள் மூடப்படும் சூழ்நிலையில், தொழிலாளர்களுக்கு, இ.எஸ்.ஐ., மூலம் ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X