தமிழ்நாடு

குளிர்பதன கிடங்குகளில் 16 கோடி முட்டைகள் இருப்பு: தீவனம் ஏற்றி வரும் வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: ''குஜராத், பீஹார், உத்தரபிரதேச மாநிலங்களில், 10 கோடி, தமிழகத்தில், ஆறு கோடி என, மொத்தம், 16 கோடி முட்டைகள், குளிர்பதன கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தீவனம் ஏற்றி வரும் லாரிகளை தடை செய்யக்கூடாது,'' என, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: 'கொரோனா' பரவல் வதந்தி காரணமாக, கோழிகளுக்கு தீவனம் போடமுடியாமல், 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், நான்கு கோடியாக இருந்த முட்டை உற்பத்தி, ஒரு கோடி சரிந்துள்ளது. மேலும், ஒரு கோழிக்கு, தினமும், 110 கிராம் தீவனம் அளித்த நிலையில், தற்போது, பாதியாக குறைக்கப்பட்டு, 50 கிராம் மட்டுமே அளிக்கப்படுகிறது. மொத்தத்தில், 50 சதவீத கோழிகளுக்கு மட்டுமே முழுமையாக தீனி அளிக்கப்பட்டு, முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. கோழிகளுக்கு, ஒரு வாரத்துக்கு அளிக்கும் வகையில் தீவனம் உள்ளது. அதன்பிறகு, தீவனம் அளிக்க முடியாது. காரணம், தீவன லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவனம், முட்டை, கறிக்கோழி ஆகியவற்றை ஏற்றி வரும் வாகனங்களை தடை செய்யக்கூடாது. தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை, கறிக்கோழி நுகர்வு அதிகரித்துள்ளது. ஆனால், முட்டை, தீவன லாரிகளை தடுக்கும் பட்சத்தில், பண்ணையாளர்களுக்கு மேலும் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பண்ணையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பேரிடராக அறிவிக்க வேண்டும். அதன் மூலம், வங்கி ஆதரவு கிடைப்பதுடன், அரசும், கடனை தள்ளுபடி செய்யும். சத்துணவு திட்டத்துக்கு, தினமும், 45 லட்சம் முட்டை சப்ளை செய்யப்பட்டது, தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் சப்ளை செய்வதுபோல், பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், அவர்களை நேரடியாக பள்ளிக்கு வரவழைத்து, முட்டை வினியோகம் செய்ய வேண்டும். கடந்த, 22 நாட்களில் மட்டுமே, முட்டை மூலம், 300 கோடி ரூபாய், கறிக்கோழி மூலம், 500 கோடி ரூபாய் என, மொத்தம், 800 கோடி ரூபாய் பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விற்பனையின்றி தேக்கமடைந்த முட்டைகளை, உத்தரபிரதேசம், பீஹார், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள குளிர்பதன கிடங்கில், 10 கோடி முட்டை, தமிழகத்தில், நாமக்கல் மாவட்டத்தில், ஆறு கோடி முட்டை என, மொத்தம், 16 கோடி முட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

முட்டை விலை உயர்வு: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில், 195 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, 30 காசு உயர்த்தி, 225 காசாக நிர்ணயிக்கப்பட்டது. நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 230, ஐதராபாத், 275, விஜயவாடா, 290, பர்வாலா, 250, மும்பை, 265, மைசூரு, 235, பெங்களூரு, 235, கோல்கட்டா, 380, டில்லி, 235.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X