சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் ரூ.20 கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பல் மதுரைக்கு தப்பி ஓட்டம்: தனிப்படை போலீசார் விசாரணை

Added : மார் 24, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில், 100க்கும் மேற்பட்டோரிடம், 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட கும்பலின் தலைவன், மதுரைக்கு தப்பி ஓடி விட்ட நிலையில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், மூன்று ரோடு ராமலிங்கா சந்திப்பில் குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை மதுரை, பழங்காநத்தத்தை சேர்ந்த சரவணன்,40, ராஜேந்திரன்,38, ஆகியோர் நடத்தி வந்தனர். இதில், 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். இந்த நிறுவனத்தில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வாரத்துக்கு, 4 சதவீத வட்டி, வழங்கப்படும். பணம் செலுத்தியதற்கு பத்திரம் வழங்கப்பட்டதோடு, பணத்துக்கு ஓர் ஆண்டில், நிலம் வழங்கப்படும் என, ஆசை வார்த்தை கூறி, பணம் வசூலித்தனர். இதில், 120க்கும் மேற்பட்டோர் பணத்தை செலுத்தினர். நிறுவனம் அளித்த வாக்குறுதியின் படி பணமோ, நிலமோ கொடுக்கவில்லை. போலீசில் ஒரு சிலர் மட்டும் இந்த மோசடி குறித்து, குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்திலின் பார்வைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, நேற்று முன்தினம், இரவு, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி நிறுவனத்தில் திடீர் ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். இதில், ஊழியர்கள், இரண்டு பேர் மட்டுமே போலீசில் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் தப்பி ஓடிய மோசடி கும்பல் தலைவர் சரவணன், ராஜேந்திரன் ஆகியோர் மதுரை சென்று, அங்கு இது போல் மோசடி நிறுவனத்தை துவக்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்துள்ளனர்.

இது குறித்து மாநகர போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மோசடி நிறுவனங்களிடம் உஷாராக இருக்கும் படி, பல முறை பொதுமக்கள் மாநகர போலீஸ் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் பொதுமக்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு, மோசடி கும்பலிடம் பணத்தை பறி கொடுக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. எனவே, குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணத்தை செலுத்தி ஏமாந்தவர்கள், மாநகர மத்திய குற்றப்பிரிவு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு துணை கமிஷனரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X