தமிழ்நாடு

அனுமதியின்றி அதிகரித்துள்ள இறைச்சி கடைகள்: 'அடாவடி' நடவடிக்கையால் நோய் தொற்று அபாயம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில் செயல்படும், இறைச்சி கடைகளில் பெரும்பாலானவை உரிய அனுமதியின்றி, சுகாதார மற்ற முறையில் செயல்பட்டு வருகின்றன. இவை மக்கள் கூட்டம் கூடுவதற்கான வாய்ப்புள்ள இடமாக இருப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாநகராட்சியில், 500க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் ஆடு, கோழி, மீன், காடை உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில், இக்கடைகளில் காலை முதல், மாலை வரை, கூட்டம் அலைமோதுவது வழக்கம். சேலம் மாநகராட்சியில், இறைச்சி கடை நடத்த அறுவறுக்கத்தக்க மற்றும் அபாயகரமான தொழில் சான்றிதழ் பெற வேண்டும். இதற்கு ஆடுகளை, குறிப்பிட்ட இடங்களில் அறுத்து கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும். ஆனால், சேலம் மாநகராட்சியில் செயல்படும் இறைச்சி கடைகளில், 20 சதவீதம் கூட உரிய அனுமதியை பெறவில்லை. தெருவோரங்களில் தற்காலிக கடை போல், அமைத்து பொதுமக்கள் பார்வையிலேயே ஆடுகளை அறுத்து, சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்த நிலையில், சிறு சாலையோர வியாபாரிகள் கூட கடைகளை அடைத்து ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால், சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகள், வழக்கம் போல் திறக்கப்பட்டு, இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. காலை முதல், மதியம் வரை, எப்போதும் இருப்பதைவிட கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால், சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை முதல், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், இறைச்சி கடைகள் திறந்திருக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் தாமாக முன்வந்து கடையடைப்பை நடத்திய போதே, இறைச்சி கடைகள் மூடாமல் குந்தகம் விளைவித்த நிலையில், தற்போது மீண்டும் அதே சூழல் உருவாகியுள்ளது. அப்படி நடந்தால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும். எனவே, சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனுமதி பெறாத, சுகாதாரமற்ற இறைச்சி கடைகளை உடனடியாக அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வியாபாரத்தை நிறுத்தினால், சாப்பாட்டுக்கே வழியில்லை என்ற நிலையில் உள்ளவர்கள் கூட, சுய ஊரடங்கில் ஒத்துழைத்தனர். ஆனால், இறைச்சி கடைகள் போட்டி போட்டு வியாபாரம் செய்தனர். சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில், 20 சதவீதத்தினர் கூட உரிய அனுமதி பெறவில்லை. அனுமதி பெற்றவர்களும், விதிமுறைப்படி ஆடுகளை அறுப்பதில்லை. இறைச்சி கடைகளை, மாநகராட்சி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனுமதியில்லாத கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X