பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வைரஸ் எதிரொலி: குளிர்சாதன பஸ்களை இயக்க அதிகாரிகள் தடை

Added : மார் 24, 2020
Share
Advertisement

சேலம்: தமிழகத்தில், 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு போக்குவரத்துக்கழக குளிர்சாதன பஸ்களை, நேற்று முதல் இயக்க தடை விதித்து, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர்.
தமிழகத்தில் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை தவிர்த்து பிற கோட்டங்களின் சார்பில், 187 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் நடந்த மக்கள் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு, குளிர்சாதன பஸ்களின் இயக்கமும் தடை செய்யப்பட்டது. நேற்று பஸ்களின் இயக்கம் துவங்கிய நிலையில், வழக்கத்தை விட, 60 சதவீத பஸ்கள் இயக்கம் குறைக்கப்பட்டது. இதில், வழக்கமாக இயக்கப்படும், 187 குளிர்சாதன பஸ்களின் இயக்கத்தை முற்றிலும் தடை செய்யும் படி, அந்தந்த கோட்ட நிர்வாக இயக்குனர்கள் உத்தரவிட்டனர். குளிர்சாதன பஸ்களின் இயக்கம் அனைத்தும் தடை செய்யப்பட்டு, அவை பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. தமிழகத்தில் இருந்து, பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவுப் போக்குவரத்துக்கழக குளிர்சாதன பஸ்கள், படுக்கை வசதி பஸ்கள், இருக்கை படுக்கை என இரண்டும் உள்ள பஸ்களின் இயக்கமும் முற்றிலும் தடை செய்யப்பட்டது. நகரங்களுக்கு இடையே, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களை மட்டுமே விரைவுப் போக்குவரத்துக்கழகம் இயக்கியது. இந்நிலை வரும், மார்ச் 31 வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X