பொது செய்தி

தமிழ்நாடு

வட மாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு; சேலம் மாநகராட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகராட்சியில், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூரிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் வருவது தடுக்கப்படும். ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா தொற்று உருவாக முக்கிய காரணமே, வெளிமாநில தொழிலாளர்கள்தான். அதிலும், அனுமதி பெறாமல், பல தொழில் நிறுவனங்கள், வடமாநிலத்தவர்கள் பலரையும் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தி வருவது நிர்வாகத்துக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. இதே போல், சேலம் மாநகராட்சியிலும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஓட்டல்கள், அழகு நிலையங்கள், கட்டுமான பணி, ஜவுளித்தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் எத்தனை பேர் வடமாநிலத்தவர்கள், எப்போதிருந்து பணிபுரிகின்றனர், எப்போது ஊருக்கு சென்று திரும்புகின்றனர் என்ற விபரங்கள் எதுவும், மாவட்ட நிர்வாகத்திடமோ, போலீசாரிடமோ இல்லை. இவர்கள் மூலமாக நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க, சேலம் மாநகராட்சியில் கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு நிறுவனம் மற்றும் கடைகளில் ஆய்வு நடத்தி, வடமாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட உள்ளது. மேலும் அவர்களின் சமீபத்திய பயண விபரங்களும் சேகரிக்கப்பட்டு, கொரோனா குறித்த நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X