பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வானவர்களின் பயிற்சி ஒத்திவைப்பு

Added : மார் 24, 2020
Share
Advertisement

சேலம்: தமிழக போலீசில், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 8,427 பேருக்கு, வரும் ஏப்.,2ல், துவங்க இருந்த பயிற்சி, ஏப்.,7க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம், போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள, 8,477 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற, 46 ஆயிரத்து, 700 பேருக்கு, கடந்த, நவ.,6ல் துவங்கி, ஒரு வாரம், உடல் தகுதி திறன் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியானது. இதில், போலீசின் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு, 2,465 பெண்கள், 5,962 ஆண்கள், என மொத்தம், 8,427 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மருத்துவ பரிசோதனை, அவர்களின் குற்றப்பின்னணி குறித்த போலீசின் விசாரணையை முடிந்த நிலையில், உயர்நீதிமன்ற வழக்குகள் காரணமாக, பயிற்சி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. வழக்குகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, வரும், ஏப்.,2 முதல், தமிழகத்தின், 35 மையங்களில் பயிற்சிகளை துவக்க தயாராகும் படி அதிகாரி களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் நடவடிக்கைளை கருத்தில் கொண்டு, பயிற்சியை ஏப்.,7க்கு அதிகாரிகள் ஒத்திவைத்தனர். பயிற்சிகள் துவங்குவது குறித்து, தேர்வானவர்களுக்கு கடிதம் மூலமாகவும், இணைய தளத்திலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X