சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேச்சேரி அருகே தனியார் பஸ் மோதல்: பைக்கில் சென்ற இரு தொழிலாளர் பலி

Added : மார் 24, 2020
Share
Advertisement

மேச்சேரி: மேச்சேரி அருகே, தனியார் பஸ் மோதியதில், பைக்கில் சென்ற இரு தொழிலாளர்கள் பலியாகினர்.
கிருஷ்ணகிரி, அஞ்செட்டி சேதுராஜபுரத்தை சேர்ந்த மாதப்பன் மகன் ராமன், 26. சேலத்தில் வெள்ளி கொலுசு பட்டறையில் வேலை செய்து வந்தார். சேலம், அன்னதானப்பட்டி, மதி மகன் விக்னேஸ்வரன், 25. இவர் சேலம், தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விடுமுறை நாளான நேற்று முன்தினம், விக்னேஸ்வரன் சேதுராஜபுரத்திலுள்ள ராமன் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை இருவரும், அங்கிருந்து பஜாஜ் டிஸ்கவரி பைக்கில் பென்னாகரம் வழியாக, சேலம் புறப்பட்டனர். நேற்று காலை, 11:00 மணியளவில் மேச்சேரி அடுத்த, சாத்தப்பாடி பஸ் நிறுத்தம் அருகே சேலம் நோக்கி சென்றனர். அப்போது சேலத்தில் இருந்து, மேட்டூர் நோக்கி வந்த ஏ.டி.எஸ்., தனியார் பஸ், பைக் மீது நேருக்கு நேர் மோதியது. விபத்தில் இரு தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X