சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலை கண்டித்த தாயை லாரியில் தள்ளி கொன்ற கொடூர மகன் கைது

Added : மார் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வேலூர்: பள்ளிகொண்டா அருகே, காதலை கண்டித்த தாயை, லாரியில் தள்ளி கொலை செய்த, கொடூர மகனை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி கலைவாணி, 42; இவர்களுக்கு விக்ரம், 22, என்ற மகனும், நர்மதா என்ற மகளும் உள்ளனர். கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஜெயகுமார் இறந்து விட்டார். கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், கலைவாணி தனது மகன் விக்ரமுடன் பள்ளிகொண்டாவை அடுத்த ஒக்கணாபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆயாவாக பணியாற்றினார். விக்ரமுக்கு மதுப்பழக்கம் இருந்ததால், தாயுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததை, கலைவாணி கண்டித்துள்ளார். மேலும், கலைவாணிக்கும், விக்ரம் காதலிக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த விக்ரம், கடந்த, 21ல் இரவு, தனது தாயுடன் தகராறில் ஈடுபட்ட விக்ரம் அவரை அடித்து உதைத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கலைவாணி சடலமாக கிடந்தார். போலீசார் விசாரணையில், கலைவாணியை, கடந்த, 21 இரவு ஏற்பட்ட தகராறில் விக்ரம் அடித்து உதைத்துள்ளார். வலி தாங்க முடியாமல், வீட்டிலிருந்து வெளியே வந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய அவரை, வேலூரிலிருந்து ஆம்பூர் நோக்கிச்சென்ற கன்டெய்னர் லாரியில், விக்ரம் தள்ளி விட்டுள்ளார். இதில், லாரி சக்கரத்தில் சிக்கிய கலைவாணி, சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, பள்ளிகொண்டா போலீசார், வழக்குப்பதிவு செய்து, விக்ரமை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மார்-202010:13:32 IST Report Abuse
ஆப்பு இந்தக் காலத்திலும் பையன் காதலித்தால் பொறுக்க முடியாத தாய். காதலிக்காக பெற்ற தாயையே தள்ளிக் கொல்லும் மகன். கொரோனா வராம என்ன செய்யும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X