பொது செய்தி

தமிழ்நாடு

வணிக நிறுவனங்களை மூட வேண்டும்: நாமக்கல் நகராட்சி ஆணையர் உத்தரவு

Added : மார் 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'மளிகை, மருந்து, காய்கறி, ஓட்டல் ஆகியவற்றை தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்களை மூட வேண்டும்' என, நாமக்கல் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நோய் தாக்குதலில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்தியாவில், 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதில், எட்டு பேர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்நிலையில், இன்று மாலை, 6:00 முதல், தமிழகம் முழுவதும், '144' தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நோய் தொற்று மேலும் பரவாமல் இருக்க, நாமக்கல் நகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களை மூட, நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

இது குறித்து, கமிஷனர் ஜகாங்கீர் பாஷா வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக, மருந்து, காய்கறி, மளிகை கடைகள் மற்றும் ஓட்டல்களை தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தையும் மூட வேண்டும்' என, தெரிவித்துள்ளார். அதையடுத்து, பஸ் ஸ்டாண்டில், நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மற்ற பகுதிகளில் உள்ள நிறுவனங்களும், அடுத்தடுத்து அடைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X