இ-சேவை, ஆதார் மையங்களுக்கு தடை: ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ-சேவை, ஆதார் மையங்களுக்கு தடை: ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுரை

Added : மார் 24, 2020
Share

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மூலம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகின்றன. மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொது இ-சேவை மையங்கள், ஆதார் சேவை மையங்கள், வரும், 31 வரை தற்காலிகமாக செயல்படாது. அதனால், பொது மக்கள், தங்களுக்கு தேவையான வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ்களை, வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க, ஏற்கனவே தமிழக அரசு அறிமுகப்படுத்தப்பட்ட https//www.tnesavai.tn.gov.in/Citizwn என்ற இணைய தள முகவரியில், விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். அதற்கான வழிமுறைகளை https://www.tnesavai.tn.gov.in/UserManual.html என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், தமிழக முதல்வர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் மையம், வரும், 31 வரை செயல்படாது. கடந்த, இரண்டு மாத காலத்திற்குள், வெளிநாடுகளுக்கு வேலை காரணமாகவோ, தொழில் காரணமாகவோ, சுற்றுலாவாகவோ, பள்ளி, கல்லூரி ஆராய்ச்சி, மேற்படிப்பிற்காகவோ, சென்று வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள், தங்கள் விபரங்களை உடனடியாக, கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், கொரோனா வைரஸ், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை, 82204 02437 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண், '1077' என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X