பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : மார் 24, 2020
Share
Advertisement

குண்டும், குழியுமான சாலையால் விபத்து: மல்லசமுத்திரம் ஒன்றியம், கட்டிபாளையம் ஏரிச்சாலை மாமுண்டி, மதியம்பட்டி, கரட்டுபாளையம், சவுரிபாளையம், வெண்ணந்தூர், சப்பையாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது. இச்சாலையில், தினமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குண்டும், குழியுமாக சாலை காட்சியளிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதிமுறை மீறும் வாகனங்கள்: குமாரபாளையம், போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள வளைவில் ஒரு வழிப்பாதையாக இருப்பினும் எதிர் திசையில் அதிக வாகனங்கள் வருகின்றன. இதனால், நேர் வழியாக வரும் வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. காலதாமதம், எரிபொருள் வீணாவது ஆகியவற்றை பொதுமக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயன்படுத்தாத அறை; போக்குவரத்து பாதிப்பு: வெண்ணந்தூரில் இருந்து, சேலம் மாவட்டம் மல்லூருக்கு செல்லும் வழியில் அனந்தகவுண்டம்பாளையம் உள்ளது. இப்பகுதியில், தண்ணீர் வசதிக்காக சாலையோரம் மோட்டார் அறை கட்டப்பட்டது. காவிரி குடிநீர் வினியோகம் தொடங்கியதில் இருந்து, இந்த அறை பயன்பாட்டில் இல்லை. விளம்பரம் செய்யும், போஸ்டர் ஒட்ட பயன்படும் சுவராக மட்டுமே உள்ளது. சாலையை ஒட்டியே உள்ள இந்த பயன்படுத்தாத அறையால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

போக்குவரத்துக்கு லாயக்கயற்ற சாலை: எலச்சிபாளையம் அருகே, மாரம்பாளையம் சமத்துவபுரத்திலிருந்து, கொன்னையார் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுன்றனர். சாலையை சரிசெய்ய வேண்டும் என்பது, மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இப்பகுதியினர் பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பிரிவு சாலையில் அறிவிப்பு தேவை: எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி பஸ் நிறுத்தத்தில், வையப்பமலை, வேலகவுண்டம் பட்டி, ஏளூர், எலச்சிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு சாலை பிரிகிறது. இதுவரை, அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. புதிதாக இவ்வழியில் வருவோர், தாங்கள் செல்லவேண்டிய பாதை தெரியாமல் சிரமப்படுகின்றனர். வேறுபகுதிக்கு சென்று அவதிப்படுகின்றனர். அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X