தமிழ்நாடு

ஒவ்வொரு மனிதரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்: கலெக்டர் அறிவுரை

Added : மார் 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: ''ஒவ்வொரு தனி மனிதரும், தம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்,'' என, கலெக்டர் மெகராஜ் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். 'மாஸ்க்' அணிந்து செல்ல வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் எல்லையில், எட்டு இடங்களில், தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து, 'கொரோனா வைரஸ்' தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு சென்று வந்த, 120க்கும் மேற்பட்டோர், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிமாநிலம் சென்று வந்த நான்கு பேர் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கலெக்டர் மெகராஜ், நேற்று, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்ட மக்கள், நமக்கு நாமே வீட்டு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு மற்றும் மருத்துவர்கள் சொன்னால்தான் கேட்போம் என்பதை தவிர்த்து, ஒவ்வொரு தனி மனிதரும், பொறுப்பை உணர்ந்து, தவிர்க்கவே முடியாமல், வீட்டை விட்டு வெளியே வந்தே தீரவேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அவ்வாறு வரும்போது, கவனமாக இருக்க வேண்டும். வீட்டுக்கு சென்றதும், கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதையே நம் உறவினர்களுக்கும் சொல்ல வேண்டும். ஈரோடு மாவட்ட எல்லைகள் மூடப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களான மருந்து, காய்கறி, உணவு போன்ற பொருட்களுக்கு தடைவிதிக்கப்படவில்லை. நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில், அனுமதிக்கப்பட்டு, ரத்த மாதிரி சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு பேருக்கும், 'நெகடிவ்' என, வந்துள்ளது. தனிமைப்படுத்தி வைத்திருக்கிறோம். இரண்டு நாட்களுக்குள் அவர்களை அனுப்பி விடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X