பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுப்பு முன்னெச்சரிக்கை: மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள், 28 நாட்கள், தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறை அலுவலர்களால், தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், அரசின் உத்தரவுகளை பின்பற்றாமல், பொது இடங்களுக்கு சென்று வருவது தெரிய வந்துள்ளது. அதனால், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில், அடையாள வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன. அவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 28 நாட்களுக்கும், தங்கள் வீடுகளுக்குள்ளேயும் முதியவர்கள், குழந்தைகள், உறவினர்கள் என, யாரையும் தொடாமல், தங்களை தாங்களே தனிமைப்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பால், காய்கறிகள், மளிகை பொருட்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு செல்லும்போது, இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் வெளி நாட்டவர் மற்றும் வெளி மாநிலத்தவர் தங்க வருகை தந்தால், அது குறித்த விபரங்களை உடனடியாக, கொரோனா வைரஸ் தடுப்பு, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் 8220402437 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தனியார் பஸ் உரிமையாளர்கள், தங்கள் பஸ்களில், கிருமிநாசினி தெளிப்பான்கள் கொண்டு தெளித்து, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று சமுதாய நோய் தொற்றாக உருவாகாமல் தடுக்க விழிப்புணர்வு பெறுவதுடன், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தங்கள் ஒத்துழைப்பை முழுமையாக அளிக்க வேண்டும். ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X